அவதானம் மக்களே இப்படியும் கொரோனா பரவலாம்

vikatan 2020 07 0a06af80 8be4 4ad0 9192 8893d8dac2bb coronavirus 4914026 1920
vikatan 2020 07 0a06af80 8be4 4ad0 9192 8893d8dac2bb coronavirus 4914026 1920

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது காற்றின் வழியாக பரவுகின்றது என்பதனை நிரூபிக்க சாட்சியங்கள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் குழுவொன்று தெரிவித்துள்ளது. இதற்காக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 32 நாடுகளை சேர்ந்த 239 ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் போது கொரோனா வைரஸ் தொற்றானது காற்றின் வழியாக பரவுகின்றது என்பது இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பிற்கான உத்தியோகப்பூர்வ வெளியீடு எதிர்வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உலக சுகாதார அமைப்பானது காற்றின் வழியாக கொரோனா வைரஸ் தொற்றாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தீர்மானத்தை திருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறித்த விஞ்ஞானிகள் குழு அறிவித்துள்ளது.