கொள்ளையடிக்க முயன்றவரால் காவற்துறை உத்தியோகத்தர் தாக்குதல்

thumbs b c 1ebf438072ef0b53a11d23a230047301 711x400 1
thumbs b c 1ebf438072ef0b53a11d23a230047301 711x400 1

தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவரை பிடிக்க முற்பட்ட காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொள்ளையில் ஈடுபடுவதற்கு முயன்ற நபர் கத்தி ஒன்றினால் காவற்துறை உத்தியோகத்தரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

காயமடைந்த காவற்துறை உத்தியோகத்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காவற்துறை முன்னெடுத்துள்ளது.