ஒட்டுக் குழுக்களால் தான் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பெற்றோர் இன்றி இருக்கின்றார்கள்; தர்மலிங்கம் சுரேஸ்

karuna pillayan
karuna pillayan

கடந்த காலத்தில் கருணா குழுவாகவும் பிள்ளையான் குழுவாகவும் இருக்கும் போதும் மக்களை மதிக்கவில்லை மாறாக மக்களை மிதித்த இவர்கள் அரசியல் பிச்சைக்கான மக்களின் வாக்குகளை பெற முயற்சிக்கின்றார்கள்.

  அதேவேளை இவர்களைப் போன்ற ஒட்டுக் குழுக்களால் தான் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தாய் தகப்பனின்றி இருக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (06) மாலை காஞ்சிரங்குடாவில் ஞானமுத்து அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தர்மலிங்கம் சுரேஸ் இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் இந்த தேர்தல் களத்திலே களமிறங்கியிருப்பது பாராளுமன்ற ஆசனத்திற்காக அல்ல. இந்த இனத்தின் விடுதலைக்காகவே. விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் இன்று நடுத் தெருவில் நிற்கின்றனர். விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் வடக்கு கிழக்கு பகுதியில் ஒரு அங்குல நிலம் கூட சிங்களவர்களால் அபகரிக்கப்படவில்லை.

ஆனால் எங்களுடைய நடுவீட்டிற்கு சிங்களவன் இன்று வருகின்றான். முன்னர் போரை நடாத்திய  தற்போதைய ஜனாதிபதி பிரதமர், மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உட்பட பௌத்த பிக்குகள் வடக்கு கிழக்கை அபகரிக்க திட்டமிட்டு  செயலணி அமைத்து தமிழ் மக்களை அடிமையாக்கி இந்த நாடு சிங்கள பௌத்த நாடு எனவும்  இங்கு தமிழர்களுக்கு கலாச்சாரம் இருக்க கூடாது , மொழி, பொருளாதார கட்டமைப்பு இருக்க கூடாது என்பதற்காக இத்தனை கட்சிகளையும் அரசாங்கம் உருவாக்கி வைத்துள்ளனர் .

சூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும் அது மகிந்த ராஜபஷசவின் அருவருடிகள் தான் போட் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவர் ராஜபஷவின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் அவ்வாறே தமிழ் தேசிய கூட்டமைப்பும் ராஜபஷவின் அருவருடிகள் தான் எனவே இவர்கள் அவர்களிடம் ஒன்றும் தட்டிக் கேட்க முடியாது 

கடந்த ரணில் அரசாங்கத்தை கவிழ்த்து ராஜபஷ ஆட்சியை பிடித்து 52 நாட்கள் நடந்த அந்த பாராளுமன்றத்தில் தமக்கான பிரதமரை கொண்டுவர இந்தியா ,அமெரிக்காவின் போட்டி அந்த போட்டியினை அப்போது தீர்மானிக்கு சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்தபோதும் எந்த பேரம் பேசலும் இல்லாது ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.  

 தமிழ் மக்களுக்கு இலங்கைதீவிலே நடந்தது ஒரு இன ழிப்பு இந்த இனழிப்புக்கு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இது இன அழிப்பு என ஜக்கியநாடுகள் குற்றவியல் நீதிமன்றம் தண்டனை வழங்கும். இதன் மூலம் தமிழ் மக்களுடைய தேசம் மலரும் இதனை யாராலும் தடுக்க முடியாது இந்த தமிழ் மக்களுக்கு அதனை அன்று பெற்றுக் கொடுப்போம்.

அந்த விடுதலையை பெற்றுக் கொடுத்த ஒரே ஒரு அணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியாகும் என அவர் தெரிவித்தார். 

இந் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட நிர்வாக செயலாளரும் வேட்பாளருமான இருதயம் செல்வகுமார், முன்னாள் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கல்குடா தொகுதியின் வேட்பாளருமான குணராசா குணசேகரன் மற்றும் அந்தக் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் உறுப்பினர்கள் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.