உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய கோப்புகள் காவல்துறைமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

unnamed 14
unnamed 14

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் நிறைவு செய்யப்படாத 38 கோப்புக்களை சட்டமா அதிபர் ஊடாக பதில் காவல்துறைமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த கோப்புக்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் பதில் காவல்துறைமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான நிசாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.