தேசிய தொல்பொருள் மாநாடு இன்று

தொல்பொருள் மாநாடு Tamil News PMO 05 720x450 1
தொல்பொருள் மாநாடு Tamil News PMO 05 720x450 1

தொல்பொருள் துறையில் செயற்பாட்டுடன் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களின் அண்மைகால ஆராய்ச்சிகளின் முடிவுகள்,கண்டுபிடிப்புகள் மற்றும் தொல்பொருள் துறையின் தற்போதைய நிலை தொடர்பில் கல்விசார் உரையாடல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய தொல்பொருள் மாநாடு இன்று (புதன்கிழமை) முற்பகல் இலங்கை மன்றக் கல்லூரியல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

ஜுலை மாதம் 7ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தேசிய தொல்பொருள் தினத்தை முன்னிட்டு ,பாரம்பரியத்தை தனிமைப்படுத்தாதிருப்போம் எனும் தொனிப்பொருளில் இம்முறை தேசிய தொல்பொருள் மாநாடு இடம்பெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய தொல்பொருள் மாநாட்டை ஆரம்பித்து மங்கள விளக்கு ஏற்றிவைத்தார். தொடர்ந்து தேசிய தொல்பொருள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மர நடுகை வேலைத்திட்டத்திற்கு அமைய மன்றக் கல்லூரி வளாகத்தில் மரக் கன்றொன்றும் நடப்பட்டது.

தொல்பொருள் மாநாடு Tamil News PMO 04
தொல்பொருள் மாநாடு Tamil News PMO 04

குறித்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பௌத்த கலாசார மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ் சந்திர, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் செனரத் திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.