சுமந்திரனுக்கான விசேட அதிரடிப் படை பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு

DUruiB4V4AI7Okm
DUruiB4V4AI7Okm

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படும் விசேட அதிரடிப் படையினரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுமந்திரனைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டினர் என்ற குற்றச்சாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் சிலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் 6 விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பை விட சுமந்திரனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு 10 விசேட அதிரடிப் படையினராக அதிகரிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் சுமந்திரனுக்கான பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டது. தேர்தல் நெருங்கியுள்ள இந்த வேளையில், சுமந்திரனுக்கான உயிர் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் அவருக்கான பாதுகாப்பை விசேட அதிரடிப் படையினரின் எண்ணிக்கையை 16 ஆக அதிகரித்துள்ளது அரசாங்கம்.

தேசிய புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைக்கு அமையவே சுமந்திரனுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகின்றது.

தேர்தல் பரப்புரைகளுக்கு சுமந்திரனுக்கு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள்களில் வரும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களுக்கு மத்தியில் சுமந்திரனின் பாதுகாப்புக்குப் பொறுப்பான விசேட அதிரடிப் படையினரின் நடவடிக்கை கடும் அதிருப்தியையும் தோற்றுவித்துள்ளது.