தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்-சஜித் தெரிவிப்பு

s.premadasa
s.premadasa

ஜனாதிபதியாக தான் ஆட்சிபீடம் ஏறும் பட்சத்தில் மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை, எந்தவொரு அரசாங்கமும் அதிகரிக்காத வகையில் அதிகரிப்பதாக தியதலாவையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்

“நாம் மக்களை அருகில் அழைத்துள்ளோம். பிரேமதாஸவினருக்கு மக்களை தூரத்தில் வைத்துப் பார்த்து என்றும் பழக்கமில்லை. உடலுக்கு சக்தியும் உற்சாகமும் மக்களால்தான் எமக்கு கிடைக்கிறது.

மக்களின் இதயத்துடிப்பில்தான் நாம் இன்று வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்த மக்களும் இதனை அறிவார்கள்.

இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இலங்கையில் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு குறைந்த பட்சம் 55 ஆயிரம் ரூபாய் மாத வருமானம் தேவை என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால், மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு இந்த வருமானம் கிடைக்கிறதா? இல்லை.

ஆனால், சஜித் பிரேமதாஸ ஆகிய நான் ஆட்சிக்கு வந்தால், கடந்த காலங்களை விட மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவேன்.

ஏனைய பகுதிகளில் வாழும் மக்களை போல கௌவரமாகவும், வசதியாகவும் இந்த மக்கள் வாழ வழியமைத்துக்கொடுப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.