ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

jaela
jaela

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தேர்தல் சட்டங்களை மீறியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவால் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று (16) பிற்பகல் கூடிய பொலிஸ் ஆணைக்குழு ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பொலிஸ் தலைமையக்திற்கு மாற்ற தீர்மானித்துள்ளது.

எனவே, வெற்றிடமாகியுள்ள ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்குமாறு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.