அரச வங்கி ஊழியர்களின் பிரச்சினைகள் பிரதமரின் கவனத்திற்கு

Mahida Rajapaksa 1
Mahida Rajapaksa 1

அரச வங்கிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரகதி வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பிரதமருக்கு இடையில் அலரி மாளிகையில் நேற்று (17) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அரச வங்கி ஊழியர்களின் ஓய்வூதிய முறையின் பலன்களை அதிகரிப்பதுடன், ஓய்வூதிய பலன்களை இழந்த ஏனைய அரச வங்கிகளுக்கு ஓய்வூதியத்தை வழங்குதல் தொடர்பில் இங்கு விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

1996 ஆம் ஆண்டு அரச வங்கி ஊழியர்களுக்கு இழக்கப்பட்ட ஓய்வூதியம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த 2014 ஆம் ஆண்டிலேயே வங்கி ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது. அந்த நன்மை ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கும் வங்கி ஊழியர்களின் குடும்பங்களின் வளர்ச்சி காரணமாகியதனை சுட்டிக்காட்டி பிரகதி வங்கி ஊழியர்களின் சங்கத்தின் அதிகாரிகள் அதன் நன்மை தற்போதைய காலப்பகுதியிலும் பொருத்தமான வகையில் அதிகரிப்பது ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு நிவாரணமாகும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், வங்கி கடன் வீதத்தை குறைத்தல் மற்றும் ஊழியர்களின் நலன் தொடர்பிலும் பிரகதி வங்கி ஊழியர்கள் சங்கம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். வங்கி ஊழியர்களின் சிக்கல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட பிரகதி வங்கி ஊழியர்கள், சங்கத்தின் பிரதான செயலாளர் ஏ.கே.பண்டார, பிரகதி வங்கி ஊழியர் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதில் இலங்கை அரச வங்கிகளில் காணப்படும் பிரச்சினை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. மக்கள் வங்கி, இலங்கை வங்கி உட்பட அரச வங்கிகளில் உள்ள முகாமைத்துவ நெருக்கடி தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு மேலதிகமாக அரச வங்கிகளின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அரச வங்கி ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சில சிக்கல்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரதமர் மிகவும் ஆர்வத்துடன் நாங்கள் முன்வைத்த கருத்து தொடர்பில் கவனம் செலுத்தி, பல தீர்வுகளை வழங்கினார். சில விடயங்கள் நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்வு பெறுவதற்கும் ஆலோசனை வழங்கினார். அதற்கமைய எதிர்வரும் காலங்களில் அரச வங்கிகளில் உள்ள சிக்கல்களை தீர்த்துக் கொள்ள முடியும் என நம்புகின்றோம் என தெரிவித்தனர்.

பிரகதி வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் நிஷாந்த சமரசிங்க கருத்து தெரிவிக்கையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, அரச வங்கி ஊழியர்களுக்கு உள்ள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டோம். 1996 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கிகளில் இணைந்த அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய பிரச்சினை ஒன்று காணப்பட்டது.

நீண்ட காலம் காணப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவை பெறும் போராட்டத்தின் முடிவாக 2014 ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஓய்வூதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த ஓய்வூதிய முறையில் நன்மைகள் அதிகரித்து ஏனைய அரச வங்கிகளுக்கும் ஓய்வூதியம் கிடைப்பது தொடர்பில் நாங்கள் பிரதமருடன் கலந்துரையாடல் மேற்கொண்டோம்.

அதனை விரைவில் செயற்படுத்தி கொள்வதற்கும், அரச வங்கிகளை மேலும் பலனுள்ளதாகவும் மக்களுக்கு நெருக்கமானதாகவும் நடத்தி செல்வது எவ்வாறு என்று கூறும் விடயம் தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தினோம். கூடிய விரைவில் அரச வங்கிகளின் கடன் வீதத்தை குறைத்து மிகவும் பலனுள்ள மற்றும் மக்களுக்கான வங்கியாக்குவதற்கான அவசியத்தை நாங்கள் அங்கு சுட்டிக்காட்டினோம். அதனை கூடிய விரைவில் செயற்படுத்துவதாக பிரதமர் எங்களிடம் கூறினார்