சுவரொட்டிகள் ஒட்ட வேண்டாம் என்ற நபர் மீது தாக்குதல்

thhakutha
thhakutha


தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் எடுபிடிகள் நடத்திய தாக்குதலில் பெண்னொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எடுபிடிகள் 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றது. 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகன சாரதி வேந்தன், உருத்திரபுர அமைப்பாளர் திலக்சன் உள்ளிட்ட மூவரே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். 

உருத்திரபுரம் பகுதியில் இந்த குழுவினர் தேர்தல் விதிமுறையை மீறி வீட்டு கதவுகளிலும், சுவர்களிலும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு சென்றுள்ளனர். இதன்போது உருத்திரபுரத்திலுள்ள வீடொன்றின் கேற்றில் சுவரொட்டியை ஒட்ட முனைந்தனர். 

இதற்கு வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு அந்த நபர்கள், நாங்கள் அனைத்து வீடுகளிலும் ஒட்டிக்கொண்டு வருகிறோம். உனக்கு மட்டும் தனிச்சட்டமா? இங்கு ஒட்டுவோம் என அடாவடியில் ஈடுபட்டனர். இரு தரப்பிற்கும் தர்க்கம் உச்சமாக, தனது வீட்டு கேற்றில் சுவரொட்டி ஒட்டினால், அவர்களை தாக்குவேன் என குடியிருப்பாளர் எச்சரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த மூவரும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குடியிருப்பாளரை தாக்கி, அவரது மனைவியையும் தாக்கியுள்ளனர். வீட்டின் சொத்துக்களிற்கும் சேதம் விளைவித்தனர். 

தாக்குதலில் காயமடைந்த பெண்மணி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு விடயம் அறிவிக்கப்பட்டதையடுத்து, அடாவடியில் ஈடுபட்ட 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர். கைது செய்யப்பட்டபோது அவர்கள் மதுபோதையில் இருந்தனர் என்பதை 

கிளிநொச்சி பொலிஸார் கூறியிருக்கின்றனர். இவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுத்தப்படவுள்ளனர்