ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

download 7 3
download 7 3

கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலதாரி ஹோட்டலிற்கு அருகில் ஹெரோயின் 02 கிராம் 400 மில்லிகிராம் மற்றும் 5600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கொட மற்றும் வத்தள பகுதிகளை சேர்ந்த 20 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.