றிஷாட் பதியூதீனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வவுனியாவில் விசாரணை

IMG 0645
IMG 0645

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆஜராகியிருந்தார். 

அவரை இன்றையதினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கடந்தவாரம்அழைப்பாணை விடுத்திருந்தது.
ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பிலான விவகாரத்தில், வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட், ஆஜராக வேண்டுமென, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.

அவரது தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் எழுத்து மூலம் அறிவித்திருந்த நிலையிலும், இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த விசாரணையை வவுனியாவில் முன்னெடுக்குமாறு றிசாட் தரப்பு தனது சட்டத்தரணிகளூடாக கோட்டை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனை ஆராய்ந்த கோட்டை நீதவான்  ,வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரிவில் இன்று ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு பணித்திருந்தார்.

IMG 0649
IMG 0649

அதற்கமைய இன்றையதினம் காலை10 மணிக்கு ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீன் ஆஜராகியிருந்தார். 
ரிஷாட் பதியுதீனின் அரசியல் எழுச்சியை தடுத்து நிறுத்துவதற்காகவும், அவரது வெற்றியை இல்லாமல் ஆக்குவதற்காகவும், அவர் தலைமையிலான கட்சியின் நாடாளுமன்ற ஆசனங்களை குறைப்பதற்காகவுமே, இவ்வாறான திட்டமிட்ட சூழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவதாக கட்சி முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.