பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது

download 2 11
download 2 11

கொழும்பு – முகத்துவாரம், விகாரை வீதிக்கு அருகில் 7 கிராம் 230 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 8.10 அளவில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

50 வயதுடைய சந்தேநக நபரை இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, இங்கிரிய காவல்துறை பிரிவின் பட்டுகம்பொல பகுதியில் நேற்றிரவு 11.30 அளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட போரா 12 ரக துப்பாக்கி ஒன்றும், 7 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் 35 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.