தேயிலை மோசடி தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது

unnamed 1 16
unnamed 1 16

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாரியளவிலான தேயிலை மோசடி தொடர்பில் கைதான பிரதான சந்தேக நபர் கடந்த இரண்டு வருடங்களில் 252 கொள்கலன் கழிவு தேயிலையினை ஏற்றுமதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுங்க பிரிவிற்கு தென்னை தும்பினை ஏற்றுமதி செய்வதாக பொய்யான தகவலை கூறி ஈராக்கிற்கு இவ்வாறு கழிவு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

சிலோன் டீ என்ற பெயரில் குறித்த கழிவு தேயிலை சந்தேக நபரால் ஈராக்கில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் இதுபோன்ற பல கழிவு தேயிலை மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த மோசடி தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்