இறுதிப் போரின் போது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டமைக்கு பொறுப்பு சம்பந்தனே

sankari 720x450 1
sankari 720x450 1

இறுதிப் போரின் போது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டமைக்கும், உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்குமான பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே ஏற்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “22 எம்.பிமார் கள்ள ஓட்டில் சென்று நாடாளுமன்றத்தில் இருந்தனர். நான் தோல்வியடைந்தேன். இவர்கள் அனைவரும் நினைத்திருந்தால் இறுதி யுத்தத்தின் போது அனைத்து மக்களையும் காப்பாற்றியிருக்க முடியும்.

இறுதி யுத்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கான முழு பொறுப்பினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே ஏற்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்