கொரோனா தொற்றுடன் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித் ஷா

download 3
download 3

கொரோனா தொற்றுக்குள்ளான இந்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் குறித்த கூட்டத்தொடர் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாகவும் தனி நபர் இடைவெளி பேணப்பட்ட நிலையிலும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சுமார் 55 உறுப்பினர்கள் குறித்த கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.