யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை பதிவான வாக்கு

vote 5653609 835x547 m
vote 5653609 835x547 m

ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு செயற்பாடுகள் காலை 7.00மணிக்கு  ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 10:00 வரைக்கும் வாக்களிப்பு வீதம் 20 வீதமாக பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண தேர்தல் மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

காலை 7 மணி தொடக்கம் 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் வாக்களிப்பு நிலையங்களில் சமூக இடைவெளியினை பேணி  சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிக்கின்றனர் 

யாழ் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் எந்த விதமான அச்சமும் இன்றி  எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி மக்கள் சுதந்திரமாக  வாக்களிப்பில் ஈடுபடுகின்றனர் 

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 584 வாக்காளர்களும் கிளிநொச்சி நிர்வாக மட்டத்தில் 92 ஆயிரத்து 264 வாக்காளர்களும் மொத்தமாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள் 

அதே போன்று யாழ் நிர்வாக மாவட்டத்தில் 508 வாக்களிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 107 வாக்களிப்பு நிலையமுமாக மொத்தமாக 615 வாக்களிப்பு நிலையங்கள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன