நாடாளுமன்றத்திற்கு இம்முறை 08 பெண் வேட்பாளர்கள் பிரதிநிதித்துவம்

images 3 2
images 3 2

இலங்கை சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு 08 பெண் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2015-2020 நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் 5.3% ஆக இருந்தது, குறிப்பாக 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டாவது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

ஆனால் தற்போது நடைபெற்ற ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலில் 8 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் பவித்ரா வன்னியராச்சி, முதித சொய்சா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலதா அத்துகோரலே ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கேகாலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்ட ராஜிகா விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் இருந்து சுதர்ஷினி பெர்னாண்டோபுல்ல மற்றும் கோகிலா குணவர்தன ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அத்தோடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து போட்டியிடும் கீதா குமாரசிங்க காலி மாவட்டத்தில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மாத்தளையில் போட்டியிட்ட ரோஹிணி கவிரத்ன ஆகியோரும் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.