தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வருகை

EU
EU

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் இன்று 9 மாகாணங்களுக்கு செல்லவுள்ளனர்.

இவர்கள் இன்று முதல் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அதற்கு முன்னதாக கொழும்பில் பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நீண்டகால கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் மொத்தமாக 60 தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். இவர்களுள் குறுகிய கால கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு, வாக்குகளை எண்ணுதல், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.