திகா மீது வீண் பழி சுமத்தும் திலகராஜ் மிகவும் கீழ்த்தரமான அரசியலை முன்னெடுப்பதற்கு தயார்

unnamed 3 5
unnamed 3 5

வளர்த்த கடா மார்பில் பாய்வது போல நன்றி கெட்ட தனமாக திகாம்பரம் மீது வீண் பழி சுமத்த முற்படுகின்ற திலகராஜ் மிகவும் கீழ்த்தரமான அரசியலை முன்னெடுப்பதற்கு தயாராகியுள்ளார்

– இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சோ. ஶ்ரீதரன் கூறியுள்ளார்.

மேலும் திலகராஜ் என்ற நபருக்கு அரசியல் அறிமுகம் கொடுத்த திகாம்பரத்தை விமர்சனம் செய்வதற்கு எவ்வித அருகதையும் கிடையாது.”

இது தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு:-

“தொழிலாளர் தேசிய சங்கத்தின் மீளுருவாக்கம் தலைவர் திகாம்பரத்தின் மீது நம்பிக்கை வைத்தே உருவாக்கப்பட்டது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின்  பழனி திகாம்பரம், தனது அர்ப்பணிப்பின் காரணமாக கடந்த நல்லாட்சி அரசு  காலத்தின் போது மலையகத்தில் என்றுமில்லாத பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன.

மலையகத்தின் சிறந்த தலைவராக திகாம்பரத்தை மலையகத் தமிழ் மக்கள் கடந்த ஒரு தசாப்த காலமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் திலகராஜ் என்ற நபருக்கு அரசியல் அறிமுகம் கொடுத்த திகாம்பரம் அவர்களை விமர்சனம் செய்வதற்கு எவ்வித அருகதையும் கிடையாது.

தனக்கு தேசிய பட்டியல் உறுப்புரிமை கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் கதிகலங்கிப் போயுள்ள திலகராஜ் சில தனியார் ஊடாக மாப்பியாக்களுடனும் வெளிநாட்டு அடிப்படைவாத அமைப்புகளின் நிதி ஆதரவுடன் மலையகத் தமிழ் இளைஞர்களை பிழையாக வழி நடத்துவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” – என்றார்.

அவருடைய எண்ணம் மலையக மக்கள் மத்தியில் எப்போதும் ஈடேறாது.