மன்னாரில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வட பிராந்திய முகாமையாளர்

IMG 1310715f6cfe3aba7c36396a8cc2b64e V 1
IMG 1310715f6cfe3aba7c36396a8cc2b64e V 1

மன்னாரில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளரை இன்று புதன் கிழமை(19) மாலை மன்னார் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மன்றில் முன் வைத்த விண்ணப்பங்களை பரிசீலினை செய்த நீதவான் குறித்த நபரை எதிர் வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு, எதிர் வரும் 27 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு உத்தரவிட்டார்.

இலங்கை அரச போக்கு வரத்து சேவையின்  வட பிராந்திய முகாமையாளர் நபர் ஒருவரிடம் முறைப்பாடு ஒன்றை சீர் செய்வதற்கு என 60 ஆயிரம் ரூபாய் பணத்தை மன்னாரில் வைத்து இன்று புதன் கிழமை (19) காலை இலஞ்சமாக பெற்ற நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.