ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் சிபாரிசு

RANIL
RANIL

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே சிபாரிசு செய்யப்படுவதாக சிறிகொத்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய பட்டியலில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்திற்கு நியமிப்பதற்கான பிரேரணை, கட்சியின் செயற்குழுவில் பரிசீலிக்கப்பட உள்ளதாகவும் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ஒருவரை பரிந்துரைப்பதற்கு மேலதிகமாக ஒரு வார காலம் வழங்குமாறு தேசியத்தேர்தல் ஆணைக்குழுவிடம் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கேட்டு கொண்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இந்த பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவே பரிந்துரைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.