சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகளே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம்; தவராசா

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 8
625.500.560.350.160.300.053.800.900.160.90 2 8

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எடுக்கும் தனிச்சையான முடிவுகளே கட்சிக்குள் ஏற்ப்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமென ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவருமான கே.வி.தவராசா கூறியுள்ளார்.

IBC தமிழ் ஊடகத்திற்கு நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சில விடயங்களில் கூட்டுப்பொறுப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும். சுமந்திரன் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளினால் தான் நாங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஜெனிவாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பிலான கூட்டத்தொடரில் எமது கட்சியிலிருந்து எவரும் அழைத்துச் செல்லப்படவில்லை.

கொழும்பில் 11 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கடற்படை அதிகாரி வசந்த கரன்னாகொடவை எதிரியாக்கி அவருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவினை பெற்றோம். ஆனால் சுமந்திரனின் கனிஷ்ட சட்டத்தரணி கரன்னாகொடவுக்கு சார்பாக ஆஜராகினார். எனவும் குறிப்பிட்டுள்ளார்.