நாட்டினுள் உள்ள இலங்கையர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; ஷவேந்திர சில்வா

90498821 596300567633344 5116826631167541248 n
90498821 596300567633344 5116826631167541248 n

நாட்டினுள் உள்ள இலங்கையர்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சிறிய தவறினால் கூட கொரோனா தொற்று பரவலாம் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் கொரோனா தொற்று பரவல் குறைந்து காணப்படினும் இலங்கையை கொவிட் தொற்று இல்லாத நாடாக பிரகடனப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டினுள் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் இனங்காணப்படவில்லை எனினும் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வருபவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் காரணத்தால் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு நாடு கொரோனாவை தோற்கடித்து விட்டதாக நம்பிக்கை ஏற்பட்டிருந்தாலும் இதனை உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் இது ஒரு வைரஸ் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்