ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பாக இழுபறியின்றி ஒரே பேச்சுவார்த்தையில் தீர்வு ;ஜீவன்

02 3 1
02 3 1

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பாக இழுபறியின்றி ஒரே பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 107ஆவது ஜனகதின நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெருந்தோட்டங்களில் அரைநாள் பெயரில் சம்பளம் வழங்குவது தொடர்பாக எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை எனவும் ஆரம்ப காலம் முதல் அந்த நடைமுறையைப் பின்பற்றி வருவதால், அது தொடரப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அரைநாள் பெயரில் சம்பளம் வழங்கப்படுமாயின், அது தொடர்பாக தங்களுக்கு அறிவித்தால், அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.