யாழ்.பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவோரின் முழுமையான விபரம்

uoj
uoj

யாழ்ப்பாண பல்கலைக்கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதியை எதிர்வரும் டிசம்பர் 6 ஆம், 7 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மனிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுப் பட்டமளிப்பு விழாவில் 1,756 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவிருக்கின்றன.

இரு தினங்களும் நாளொன்றுக்கு ஐந்து அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 3 கலாநிதிப் பட்டங்கள், 19 முது தத்துவமாணி, 36 முதுகலைமாணி ஆகிய பட்டப்பின் தகைமைகள் உட்பட 1,358 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவிருப்பதுடன் 348 வெளிவாரிப்பட்டதாரிகளின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

உயர் பட்டப் படிப்புகள் பீடம், வணிக முகாமைத்துவ பீடம், கலைப்பீடம், விஞ்ஞான பீடம், மருத்துவ பீடம், ஆகிய பீடங்களைச் சேர்நத உள்வாரிப் பட்டதாரிகளினதும், திறங்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தைச் சேர்ந்த வெளிவாரிப் பட்டதாரிகளினதும் முழுமையான விபரங்கள் வருமாறு :

உள்வாரி :

கலாநிதி – 03
முது தத்துவமாணி – 19
முது கலைமாணி (தமிழ்) – 36
தொழில் நிருவாகமாணி – 324
வணிகமாணி – 46
சட்டமணி – 52
வைத்திய சத்திர சிகிச்சைமாணி – 126
தாதியியல் ஃ மருந்தகவியல் ஃ மருத்துவ ஆய்வுகூடவியல் விஞ்ஞானமாணி – 43
விஞ்ஞானமாணி ( பொது மற்றும் சிறப்பு ) – 156
கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி – 20
கணினி விஞ்ஞானமாணி – 01
கலைமாணி ( பொது மற்றும் சிறப்பு ) – 364
நுண் கலைமாணி ( வாய்ப்பாட்டு, நடனம், சித்திரமும் வடிவமைப்பும் ) – 168

வெளிவாரி :

கலைமாணி – 256
வணிகமாணி – 40
நுண் கலைமாணி ( வாய்ப்பாட்டு ) – 01
நுண் கலைமாணி ( நடனம் ) – 03
தொழில் முகாமைத்துவமாணி – 48