தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை

school closed
school closed

எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை, முஸ்லிம் பாடசாலைகளை தவிர்த்து ஏனைய அனைத்து தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் பணிப்புக்கு அமைய, கல்வியமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

தீபாவளி திருநாள் எதிர்வரும் 27ஆம் திகதி கொண்டாடப்படும் நிலையில், இந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்காக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை தினத்துக்கு பதிலாக மற்றுமொரு தினத்தில் பாடசாலையை நடத்த குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.