பத்தாயிரம் குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்ய நடவடிக்கை!

agd
agd

இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஊழல், மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் 10,000 குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட விவகாரம் (ஊழலுக்கு எதிரான) மற்றும் ஊடகம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழுவிடம் தெரிவித்தது.

இவ்வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 7800 குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சுட்டிக்காட்டியது.

அதேநேரம், தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் புதிய சட்டவரைபொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இதனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கவிருப்பதாகவும் பொதுஜன ஊடகத்துறை அமைச்சின் அதிகாரிகள், துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் தெரிவித்தனர். ஊழல்மோசடியைத் தடுப்பது தொடர்பான சட்டவரைபை அடுத்த அமர்வில் ஆராய்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

சட்ட விவகாரம் (ஊழலக்கு எதிரான) மற்றும் ஊடகம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் கடந்த 23ஆம் திகதி கூடியது. இதன்போதே இவ்விடயங்கள் குறித்து ஆராயப்பட்டிருந்தன.