வாழைச்சேனை துறைமுகம் புனர்நிர்மாணம்

ameer ali
ameer ali

வாழைச்சேனை துறைமுகத்தை நான்காயிரம் மில்லியன் ரூபாய் செலவில் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யவுள்ளதாக விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எம்.எஸ்.அமீர் அலி ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

தற்போது 240 படகுகள் நிற்பாட்டப்படுகின்ற வாழைச்சேனை துறைமுகத்தில் ஒரே தடவையில் 700 படகுகள் நிற்பாட்டுகின்ற இடமாக அதனை புனர்நிர்மாணம் செய்து இலங்கையிலே மிகப் பிரதானமான மீன்பிடித் துறைமுகமாக வாழைச்சேனை துறைமுகத்தை மாற்றியமைக்கவுள்ளோம்.

வாழைச்சேனை துறைமுகத்தை புதிய நவீன தொழிநுட்பத்தின் கீழ் அமைச்சர் பீ.ஹரீசன் வழிகாட்டலில் புனரமைக்கவுள்ளோம்.

மீனவர்களின் பிரதானமான வாழ்வாதாரமாகவுள்ள இவ் வேலைத்திட்டத்தை வழங்கியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு விசேடமாக நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.