6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மேற்கிந்திய தீவுகள்

IMG 20200726 065300 10 scaled 1
IMG 20200726 065300 10 scaled 1

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

அதன்படி நேற்றைய ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இதில் அதிகபட்ச ஓட்டங்களாக ஜோன் கம்ப்பெல் 32 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார், பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் அண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிரோட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 369 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனை அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து அணியை விட 232 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

இந்நிலையில் மேலும் 4 விக்கெட்கள் கைவசம் இருக்க இன்று போட்டியின் மூன்றாவது நாளை மேற்கிந்திய தீவுகள் அணி தொடரவுள்ளது