டோனிக்காக பிரியாவிடை கிரிக்கட் போட்டி

113957917 3ee7b513 ba2f 4017 9528 7c09446d8c9a
113957917 3ee7b513 ba2f 4017 9528 7c09446d8c9a

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் டோனிக்காக பிரியாவிடை கிரிக்கட் போட்டி ஒன்றை நடத்துவதற்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

டோனிக்கான பிரியாவிடை கிரிக்கட் போட்டியை அவரது  சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடத்த வேண்டும் என்று மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் மூத்த நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், டோனிக்கு பிரியாவிடை ஆட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது தங்களது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

எனவே, ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்த பின்னர் அது குறித்து அவதானம் செலுத்தலாம் என அந்த அதிகாரி கூறியதாக தகவல் வெளியாகியது.