9 மாவட்டங்களில் தேர்தல் நடத்துவதற்கு தடை

india high court
india high court

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கியது.

இந்நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களிற்கான தொகுதி வரையறை முடிக்கப்படாமல் உள்ளமையின் காரணமாக அவற்றிற்கான தேர்தல்கள் நடாத்தக்கூடாது என திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதன்படி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் தொகுதி வரையறை மேற்கொள்ளப்படாத 9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களிற்கான தேர்தல்களை நடாத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் தொகுதி மறுவரையறை பணிகளை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதால், திட்டமிட்டபடி டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.