நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்

nirpaya
nirpaya

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் கடந்த 27ம் திகதி கால்நடை பெண் வைத்தியர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நால்வர் கொல்லப்பட்டமை தொடர்பில் டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி வரவேற்றுள்ளார்.

காவல்துறையின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பில் டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவிக்கையில்;

குற்றவாளிகளுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பொலிஸார் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

இதேபோல் நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்பட வேண்டும் என நாட்டின் நீதித்துறையையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.