பாபர் மசூதி இடிப்பு தினம் – சபரிமலையில் பலத்த பாதுகாப்பு

babar
babar

இன்று டிசம்பர் 6ம் திகதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சன்னிதானத்தில் நவீன துப்பாக்கி ஏந்திய அதிவிரைவு அதிரடிப்படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருமுடி கட்டுடன் சபரிமலை வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்பு 18ம் படி ஏறிச்செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

சபரிமலையில் சந்தேகத்திற்கிடமானவர்களை கண்டறியும் நோக்கில் மும்பை முதல் சன்னிதானம் வரை கண்காணிப்பு கமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.