சட்டம் தன் கடமையை செய்துள்ளது!!

hydrabath
hydrabath

இந்தியாவின் ஹைதராபாத்தில் பெண் வைத்தியரை கற்பழித்து கொலை செய்த 4 பேரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய குற்றவாளிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை தொடர்பாக இன்று அதிகாலை 3 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் வைத்தியரை எரித்துக் கொன்ற ஹைதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அழைத்து சென்றனர்.

கொலை நடந்த பாலத்தின் அருகே சென்றபோது அவர்கள் எப்படி கொலை செய்தார்கள் என்பதை நடித்து காட்டினார்கள். அப்போது 4 பேரும் திடீரென பொலிஸாரின் ஆயுதங்களை பறித்தும், கற்களால் தாக்கியும் தப்பி ஓட முயன்ற வேளையில் பொலிஸார் குற்றவாளிகள் 4 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இது தொடர்பில் சைபராபாத் பொலிஸ் உயர் அதிகாரி பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில்;

குற்றவாளிகள் தம்மை தாக்கியமையின் காரணத்தினால் எம்மை தற்காத்துக்கொள்ளும் நோக்கிலேயே குற்றாவாளிகளை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினோம் என தெரிவித்துள்ளார்.

இறுதியாக நான் ஒன்றே ஒன்று மட்டும் கூறிக்கொள்கிறேன். சட்டம் தன் கடமையை செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.