பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு – 15 பேர் பலி!

pakistan mosque
pakistan mosque

பாகிஸ்தானில் மசூதியில்இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவாட்டாவில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் (10) இடம்பெற்ற சிறப்பு தொழுகையில் குண்டு வெடிப்பு இடம்பெற்றது.

படுகாயம் அடைந்த நபர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.