கொரோனாவால் உலகளாவிய ரீதியில் பாரிய பாதிப்பு ஏற்படும்

4 r
4 r

சீனாவின வுஹான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு போன்று உலகளாவிய ரீதியில் பாரிய பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்த பிரபல சீன விஞ்ஞானி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தோல்விடையும் நாடுகளின் நிலைமை மிகவும் மோசமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவிற்கு வெளியே இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் பரவல், சீனாவின் வுஹான் நகரத்திற்கு சமமான நிலைமையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முடிந்தளவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் அது மரணத்தின் வீதம் 3:2 எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.