கொரோனா நோயாளிகளை காப்பாற்ற முடியாததன் காரணமாக உயிரை மாய்த்த மருத்துவர்!

.jpg
.jpg

அமெரிக்கா – நியூயோர்க் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய மருத்துவர், பிரீன் என்ற பெண் மருத்துவர், தன் கண்ணெதிரே கொரோனா பாதிப்பால் காப்பாற்ற முடியாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை (60) ஆயித்தை எட்டியுள்ள நிலையில் நியூயோர்க்கில் மட்டும் (17) ஆயிரத்து (500) பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பிரீன் கொரோனாவினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் மருத்துவப் பணிக்கே திரும்பியிருந்தார்.

தானும் ஏனைய மருத்துவர்களும் போராடியும் நோயாளிகளைக் காப்பாற்ற முடியாமல் கண்ணெதிரே அவர்கள் உயிர்ப்பிரிவதை தன்னால் தாங்க முடியவில்லை என்று அவர் பல முறை கூறியதாக அவரது தந்தை வேதனையுடன் கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கடும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.