கொரோனா தொற்று தொடர்பில் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் புள்ளிவிபரங்களின் படி, கொரொனா வைரஸ் பாதிப்பு பட்டியலில் ஸ்பெயினை பின்னுக்கு தள்ளி (5) வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
கடந்த (24) மணி நேரத்தில் இந்தியா மிக உயர்ந்த (10,434) கொரோனா வைரஸ் பதிவு செய்துள்ளது, இது நாட்டில் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை (2,46,628) ஆக உயர்த்தியுள்ளது. இது ஸ்பெயினின் (2,41,310) ஐ விட அதிகமாகும்.
மேலும், ஒரு நாளில் வைரஸ் காரணமாக (297) உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, இதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை (6,929) ஆக அதிகரித்துள்ளது.
தற்போது அமெரிக்காவில் (19,06,060) பேரும், பிரேசிலில் (6,14,941) பேரும், ரஷ்யாவில் (4,58,102) பேரும், இங்கிலாந்தில் (2,86,294) பேரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இறப்பு எண்ணிக்கையை பொறுத்தவரை பிரேசில், ஸ்பெயின் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் குறைவாக இருக்கிறது. அதேசமயம் இங்கிலாந்தின் வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை உடன் இந்தியா நெருக்கமாக உள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட (6) நாடுகளில் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் மட்டும் பாதிப்புடன் ஒப்பிடுகையில் குறைவான பலி எண்ணிக்கையை கொண்டுள்ளன.
மொத்தம் (9) மாநிலங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளன.
அவற்றில் தமிழ்நாடு (1,458) பேர், மேற்குவங்கம் (435), ஹரியானா (355), அசாம் (244), ஜார்க்கண்ட் (106), ஆந்திரப் பிரதேசம் (210), தெலுங்கானா (206), ஒடிசா (173), கோவா (71) பேர் அடங்கும். டெல்லியில் புதிதாக (1,320) பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத் (498), கர்நாடகா (378), உத்தரப் பிரதேசம் (382), பீகார் (233), ராஜஸ்தான் (253), மத்தியப் பிரதேசம் (232), கேரளா (108) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை (120) என்ற இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையை அடைந்துள்ளது.
உலகளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை (6,973,427) ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை (402,049) ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை (3,411,118) ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.