உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கை!

 மையம்
மையம்

உலகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிகபட்சமாக (136,000) பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள.

மேலும் உலக சுகாதார ஸ்தாபனம், கொரோனா அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து தொற்று பரவுவது அரிதாகவே உள்ளது என்றும் கூறியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரொஸ் அதானோம் (‎Tedros Adhanom) ஜெனிவாவில் நேற்று (8) ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோதே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது

“ கடந்த ஞாயிற்றுக்கிழமை இதுவரை இல்லாத அளவு அதிப்பட்சமாக உலகம் முழுவதும் (136,000) பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் (70) இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (4) இலட்சத்துக்கு அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரேசில் தொடர்ந்து கொரோனா பரவலின் மையமாக உள்ளது.

சிங்கப்பூரில் தொற்று ஏற்பட்டவர்கள் பலருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை.

மேலும் கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களிடமிருந்து தொற்று அவ்வளவு எளிதாக பரவுவது இல்லை.

இப்போது நாங்கள் உலக நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட பரவலை தடுப்பதற்காக ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன்,பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.

கொரோனா வைரஸீக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸீற்க்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது எனவும் தெரிவித்தார்.