இஸ்ரேல் விஞ்ஞானிகள் சாதனை; கொரோனா வைரசின் மூலக்கூறு கண்டுபிடிப்பு

Ta 20
Ta 20

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மூலக்கூறுகளை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து சாதித்துள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இதுவரை 74 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதித்துள்ளனர்.

4 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்த கொடிய வைரசை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய இஸ்ரேலில் உள்ள, பார் இலன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரசின் மூலக்கூறுகளை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

இந்த வைரசின் ஆன்டிஜன், புரதசத்துகள் மற்றும் ஆற்றல் மிகுந்த 2 எபிடோப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் விரைவில் கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்க முடியும் என்றும் இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.