கொரோனா சிகிச்சைக்காக ஒருவருக்கு 1.1 மில்லியன் டொலர்கள் கட்டணம்

7 us 1
7 us 1

அமெரிக்காவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த 70 வயது நோயாளிக்கு மருத்துவமனையில் சிகிச்சை கட்டணமாக 1.1 மில்லியன் டாலர்கள் விதிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்த நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. நாட்டில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மைக்கேல் புளோர் என்ற 70 வயதான முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மார்ச்.,4 ல் வாஷிங்டன்னில் உள்ள ஒரு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.

பல நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்தவர், உயிர் பிழைப்பது கடினம் என்ற தருணத்தில் அவரது குடும்பத்தாரும் வந்து பார்த்து பேசி சென்றனர். பின் சில நாட்களில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து விட்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திருப்பியவருக்கு பில் மூலமாக காத்திருத்தது அடுத்த அதிர்ச்சி.

பொதுவாக மருத்துவமனை பில் ஒரு தாள் (பக்கம்) வரும். ஆனால் இவருக்கோ 181 பக்கம் கொண்ட நோட்டு பில்லாக அனுப்பப்பட்டது. அதில் மொத்தமாக 1.1 மில்லியன் டொலர்கள் ( $1,122,501.04) இந்திய மதிப்பில் தோராயமாக 8,35,52,700 ரூபாய் பில் ஆகும். அதில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 9,736 டொலர்கள் எனவும், வென்டிலேட்டர் பயன்படுத்தியதற்காக 82,000 டொலர்கள் மற்றும் , தீவிர சிறப்பு சிகிச்சைகளுக்காக 2 நாட்களுக்கு1 லட்சம் டொலர்கள் என பில் தீட்டப்பட்டிருந்தது.

ஆனால் அரசின் காப்பீடு புளோருக்கு உதவியது. ஆனால் ப்ளோர் வரிசெலுத்துவோரின் பணம் தனக்காக பயன்படுத்தப்பட்டது தனக்கு குற்ற உணர்வை உருவாக்குகிறது என்றார்.