சிங்கப்பூரில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா

8 d 4
8 d 4

கொரோனா பாதிப்பு அதிகரித்து சிங்கப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 347 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சிங்கப்பூரிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 347 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 40,197 ஆக அதிகரித்தது. புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 2 பேர் சிங்கப்பூர் குடிமக்கள். மற்ற 345 பேர் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றுக்கு 26 பேர் பலியாகியுள்ளனர். சிங்கப்பூரில் ஒரே நாளில் 768 பேர் நோயிலிருந்து மீண்டனர். நாட்டின் மொத்த நோய் தொற்றில் இருந்து 28,808 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தற்போது கொரோனா பாதித்த 19 நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து சோதனை முறையில் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.