சீனாவின் தென் பகுதியில் பெருவெள்ளம்

flood history
flood history

சீனாவின் தென் பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் இதுவரை 106 போ் உயிரிழந்துள்ளதுடன், பலா் காணாமல் போயுள்ளனா். சுமார் 15 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பெருமளவு வீடுகள் கட்டங்கள் சேதமடைந்ததுடன், வீதிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இன்றும் அங்கு மழை தொடரக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகா்த்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று நோய் நெருக்கடிகளுக்கு மத்தியில் இங்கு வெள்ள நிவாரணப் பணிகளிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மோசமான வானிலை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படுவதுடன் நீர்த்தேக்கங்கள், அணைக்கட்டுகளில் நீர்மட்டம் அபாய நிலைக்கு உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமான யாங்ஷுவோ நகரில் 1,000க்கும் அதிகமான ஹோட்டல்களும் 5,000 கடைகளும் வெள்ளத்தால் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவில் கனமழையால் ஹுபே மாகாணமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தொற்று மையமான இம்மாகாணம் கொரோனா நெருக்கடியால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் இப்போது மழை, வெள்ளத்தால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.