உலக தரவரிசையில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா

TOI Story
TOI Story

மனிதர்களை பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் உச்சத்தை தொடுகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் தரவரிசையில் இந்தியா ரஸ்யாவை பின்தள்ளி 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த வைரஸ் காரணமாக இந்தியாவில் இதுவரையில 6 இலட்சத்து 97 ஆயிரத்து 836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், 19 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையில், 4 இலட்சத்து 24 ஆயிரத்து 891 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன், 2 இலட்சத்து 53 ஆயிரத்து 245 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் பிரேஸில் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

அதேநேரம் 4ஆவது இடத்திலிருந்த இந்தியா 3ஆவது இடத்திற்கு முன்னேறிய நிலையில், 4 ஆவது இடத்தில் தற்போது ரஸ்யா உள்ளமை குறிப்பிடத்தக்கது.