அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா!

TOI Story
TOI Story

அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் மேலாக உள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

நேற்று ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் 61,647 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் நேற்று(புதன்) ஒரு நாளில் 890 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31 லட்சத்து 58 ஆயிரத்து 932 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் 134,832 ஆக உள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரும் மாகாணங்களான டெக்ஸாஸ், கலிபோர்னியாவில் கொரோனா தொற்று அதிகமாகக் காணப்படுகிறது.