இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

download 1 4
download 1 4

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று(சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவு வரை ஒரு விக்கட் இழப்பிற்கு 32 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 9 விக்கட்டுக்களை இழந்து 469 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக பென் ஸ்டொக்ஸ் 176 ஓட்டங்களையும், டொம் சிப்லி 120 ஓட்டங்களையும் பெற்று கொண்டனர்.