நேபாள காவல்துறையின் திடீர் துப்பாக்கிச்சூடு – இந்தியர் காயம்

Indian national injured after Nepal Police opens fire
Indian national injured after Nepal Police opens fire

பீகார் எல்லையில் நேபாள போலீஸ் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒரு இந்தியர் காயமடைந்தார்.

இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் கடந்த சில மாதங்களாக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளது. குறிப்பாக அந்நாட்டு பிரதமர் கேபி சர்மா ஒலி இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். 

குறிப்பாக எல்லை விவகாரத்தில் இந்தியாவின் பகுதிகளை நேபாளம் உரிமைக்கோரி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்திய-நேபாள எல்லையை பிரிக்கும் மாநிலங்களில் ஒன்றான பீகாரில் எல்லையோர மாவட்டமாக கிருஷ்ணகஞ் அமைந்துள்ளது. இந்தியாவில் இருந்து நேபாளம் செல்ல இந்த மாவட்டத்தில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரு நாட்டு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

காயமடைந்த நபர்

இந்நிலையில், எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேபாள போலீசார் இன்று அத்துமீறி கிருஷ்ணகஞ் மாவட்டத்தை சேர்ந்த சிலரை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

நேபாள போலீசாரின் இந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கிருஷ்ணகஞ் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்கு இருநாட்டு எல்லை விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் நேபாள படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.