பனிக்கரடிகள் அழிவடையக் கூடிய அபாயம்

0 CATERS David Jenkins Polar Bear Pics 05

காலநிலை மாற்றத்தினால் பனிக்கரடிகள் அழிவடையக் கூடிய அபாயம்

 இந்த நூற்றாண்டின் இறுதியில் பனிக்கரடிகள் அழிந்து போகக்கூடுமென ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த தவறினால், இந்த மோசமான நிலை உருவாகுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆர்ட்டிக் கடலிலுள்ள பனிப்பாறைகள் உருகி வருவதனால், பெரும்பாலான விலங்கினங்கள் அவற்றின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மாமிசங்களை உண்ணும் இந்தப் பனிக்கரடிகள், தமது உணவாக சீல்களை (Seals)வேட்டையாடுவதற்காக ஆர்ட்டிக் சமுத்திரத்திலுள்ள பனிப் பாறைகளையே சார்ந்திருக்கின்றன.

இந்தநிலையில் பனிப்பாறைகள் உருகி உடைந்தால், பனிக்கரடிகள் உணவிலிருந்து மிகநீண்ட தூரத்துக்கு அல்லது கரைகளுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் அவை தமக்கானதும் தமது குட்டிகளுக்குமான உணவைப் பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடியைச் சந்திக்குமெனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.