அயோத்தியில் புதிய ஸ்ரீ ராமர் ஆலயம் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம்

754563 ram temple model reuters 2
754563 ram temple model reuters 2

அயோத்தியில் புதிய ஸ்ரீ ராமர் ஆலயம் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

இதற்கு முன்னதாக பழைய ராமர் ஆலயத்தை அகற்றும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக ஸ்ரீ ராமர் ஆலய நம்பிக்கை அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இந்த பணிகள் இரண்டு மாதத்திற்கு முன்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பின்போட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராமர் ஆலய பழைய கட்டடம் அகற்றப்படும் நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அன்றைய தினம் அடியார்கள் அயோத்தியில் பொருத்தப்படும் பல ராட்சச திரைகளின் ஊடாக இந்த நிகழ்வினை காண்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆலயம் தொடர்பாக பங்களிப்புக்களை வழங்கிய லால் கிருஷ்ணா அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி உட்பட பல பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட மேல்நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் ஆலயத்தினை நிர்மாணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

அதே மாவட்டத்தில் முஸ்லீம்களுக்காக 5 ஏக்கர் பொருத்தமான காணியினை வழங்கவும் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.